திருச்சி மேற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு..
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளர்,அமைச்சர் கே.என்.நேரு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளான
கோரிமேடு,புது தெரு, நாயக்கர் தெரு,
புத்தடி மாரியம்மன் கோவில் தெரு,
ஒண்டி கருப்பண்ணசாமி கோவில் பகுதி,
கள்ளர் தெரு,
சின்ன மிளகுபாறை, ராஜா காலனி, எஸ்பிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு தீவிர வாக்கு சேகரிபப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் வழி நெடுகிலும் திரண்டு வந்து மலர் தூவியும், மாலை அணிவித்தும் , பூரண கும்பங்களை ஏந்திக் கொண்டும் , பெண்கள் பெருவாரியாக திரண்டு ,உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேரு தமிழக அரசின் சாதனைகளையும், தொகுதிக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறிய போது பலத்த வரவேற்பு பொது மக்களிடம் காணப்பட்டது.
மேற்கண்ட பகுதிகளின் வளர்ச்சி தொடரவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கவும் , பெண்கள் உரிமைத்தொகை தி.மு.க. தேர்தல் வாக்குறிப்படி கிடைக்க ,,வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தர வேண்டும் என்றும்
என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,, மற்றும் ,மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் வி.சி.க. மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், மற்றும்விசிக கட்சியின் தொண்டர்களும், திமுக நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் ,கலந்து கொண்டனர். அப்பகுதியே தேர்தல் திருவிழா கோலம் பூண்டது.



No comments:
Post a Comment